Friday 11 April 2014

அபத்தம்

சமீப காலமாக ஒரு வியாபார கூட்டம் கிளம்பியுள்ளது. இயற்கை வாழ்வியல் இயற்கை வேளாண்மை இயக்கங்கள் என்ற போர்வையில்.. நம்மாழ்வாரின் படத்தை முன்னாள் வைத்துக்கொண்டு வியாபாரம்  கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் என்.ஜி.ஓ க்கள். பல நிதி ஆதாரங்களையும் நன்கொடைகளையும் வாங்கிக்கொண்டு அதற்கு மேல் அவர்கள் செய்யும் காரியங்களுக்கும் மக்களிடம் ப்ரீமியம் ரேட்டில் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். இதை விவசாயிகளே செய்தால் கூட பரவாயில்லை; ஆனால் இவர்கள் இடைத்தரகர்கள் போல.

ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட் போட்டுக்குவாங்க... ஆனா, அவங்க பத்திரிகைகள்'ல மறை நீர் (Virtual Water) பற்றி பக்கம் பக்கமா எழுதுவாங்க..  கைத்தறி வெள்ளை வேட்டி கட்ட சொன்னா கசக்கும்..  தினமும் எதோ ரூபத்துல அரைகிலோ வெள்ளை சர்க்கரை சாப்பிடுவாங்க.. தினமும் அசைவம் இல்லாம சோறு இறங்காது.. இயற்கை இயற்கை னு பச்சை கலர்ல பிளக்ஸ் வைப்பானுங்க.. இயற்கை பொருட்கள் கம்பெனி னு கார்பரேட் பூதத்தை உருவாக்குவாங்க.. இவங்க தான் இயற்கைய காப்பாத்தராங்களாம்..!

இயற்கை மருத்துவம், மருந்துகள் னு எழுதுவாங்க; பசு பொருட்கள் மூலம் உருவாகி வரும் நூற்றுக்கணக்கான மருந்துகள் பற்றி எழுதாமல் இருட்டடிப்பு செய்வாங்க... இயற்கை வேளாண்மை னு முழங்குவாங்க... ஆனா இயற்கை வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம் என அனைத்துக்கும் ஆதார சக்தியான நாட்டு பசுக்களின் நிலை  பற்றியோ, அதை தடுப்பதை பற்றியோ, பேச மாட்டாங்க.. ஏன்னா, இவங்களோட பண்ணாட்டு மாபியா தொடர்பு.. அரசியல் சக்திகள் இவர்களை இயக்குது.. மாட்டை பற்றி பேசினா முஸ்லிம்-கம்யுனிஸ-காங்கிரஸ் லாபி ஏத்துக்காது.. அதை மறைக்க ஹிந்துத்துவானு எதிர்முழக்கம் தருவாங்க.. ஏண்டா, நம்மாழ்வார் போட்டோ வச்சு வியாபாரம் பண்றீங்க, நம்மாழ்வார் ஒருமுறைகூட சொல்லலியா நாட்டு பசுக்கள் முக்கியம்னு?? காப்பாத்தாட்டியும் பரவால்ல.. இவனுங்க மாட்டுக்கறி மற்றும் அசைவ உணவுகளை உணவு திருவிழா னு போடுவானுங்க.. கொடுமை..!



வாரம் ரெண்டு புக் வெளியிடுவாங்க... விலை நூறு இருநூறு இருக்கும்.. சேவை னு வந்தப்புறம் ஏண்டா எதை தொட்டாலும் பெரிய காந்தி நோட்டா முழுங்கறீங்க..? இதுக்குத்தான ஸ்பான்சர் னு விவரம் தெரியாத பண்ணை கோழிகளான ஐடி  கூட்டத்தை பிடித்து வைத்திருக்கீங்களே.. பதிப்பிக்கிற விசயங்களை நீங்களே கண்டுபிடிச்சீங்களா?? களத்தில் மக்களிடம் சேகரிச்ச விஷயம் தான?? எல்லா செலவையும் ஸ்பான்சர் கிட்ட வாங்கிய பின் எதுக்குடா நூறு இருநூறு?? பதிப்பிச்ச விலையில் விக்கலாமில்ல?? எல்லாருக்கும் போய் சேருமில்ல??

அப்புறம் விதை வியாபாரம்.. அது இதுக்குமேல..

உண்மையில் இவர்களில் வியாபாரிகள் தான் அதிகம்.. ஆற்றாமை, இயலாமை, சூழல் போன்ற காரணங்களால் முழுமையான இயற்கை முறை, கிராமிய வாழ்க்கைக்கு திரும்ப முடியாது மன அழுத்தத்தில் இருக்கும் சிறுவர்களிடம் பணம் பிடுங்கி, தங்களது அரசியல் ஆட்பிடிப்பு வேலை, மறைமுகமாக சித்தாந்த திணிப்பு வேலைகளை செய்வதுதன் இந்த நவீன "இயற்கை செயல்பாட்டாளர்கள்" "தற்சார்பு வாழ்க்கை போதகர்கள்" "தமிழர் வாழ்வியல்" என பல்வேறு முகமூடியில் சுற்றுபவர்கள்..

இவர்களின் வியாபாரத்தில் எந்த ஒரு ஏழை குடியானவனும் பங்கேற்க முடியாது. அவ்வளவு காஸ்ட்லி. பின் யாருக்குடா டீ ஆத்துறீங்க??

நம்மாழ்வார், ஆர்கானிக், இயற்கை, தமிழ்முறை போன்ற பிராண்டுகள் வியாபாரத்தை புறக்கணியுங்கள். எந்த இயக்கத்தின் பின்னாலும் போகாதீர்கள். இயக்கங்கள் நம்மை அடகு வைக்க ரொம்ப காலம் ஆகாது. உங்கள் பணத்தை இந்த பன்றிகளை வளர்க்க வீணடிக்காதீர்கள்.

இயற்கை, கிராமங்கள், பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்தில்லை. அதே சமயம், மக்களின் இந்த மனமாற்றத்தை காசாக்கவும், ஒட்டாக்கவும், மீண்டும் இதே கார்பரேட் குப்பையில் சிக்கவைக்கவும் கூலிப்படை பசுமை போராளிகள் என்றும், பூமியின் நண்பர்கள் என்றும் பல ரூபத்தில் சுற்றுவதுதான் விஷயம். உண்மையில் நல்லது செய்ய நினைத்தால் முதலில் மனதளவில் நீங்கள் பாரம்பரிய சூழலுக்கு மாறுங்கள்; உங்களுக்கு தேவையானதை நீங்களே விளைவிக்க முயற்சி செய்யுங்கள்; Slow food-Local Food-Native food-Native Life என்று மாறுங்கள்.. இயற்கையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளுங்கள்; கிராமங்கள் கிராமமாக வாழ, நகரமயமாகாமல் தடுக்க களத்தில் உங்களை சுற்றி உள்ள சமூகத்தில் வேலை செய்யுங்கள். அப்படி வாழ்வதற்கான சூழலை/சந்தையை உருவாக்குங்கள்; கிராமிய பாரம்பரிய வாழ்க்கையின் அடிப்படைகளை, சுதேசியை, சனாதனத்தை, தற்சார்பை, புரிந்து அவற்றை பலப்படுத்த வேலை செய்யுங்கள்.


No comments:

Post a Comment