Wednesday 15 January 2014

நம்மாழ்வார் - கம்யுனிஸ்ட்களின் சிம்ம சொப்பனம்




நம்மாழ்வார் அவர்கள் எந்த வித சித்தாந்த தாக்கமும் இல்லாதவர். ஆரம்பத்தில் அவர் வளர்ந்த சூழல் ஏற்ப்படுத்திய திராவிட/கம்யுனிஸ தாக்கம் அனிச்சையாக பல இடங்களில் வெளிப்பட்டாலும், அவற்றின் தீமைகளை உணர்த்து தன்னை பல வகையிலும் திருத்தி அவற்றின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். எல்லா கட்சியிலும் உள்ள நண்பர்களோடு நல்ல முறையில் பழகினார். இருப்பினும் ஐயாவின் சேவைகளால் அதிக பாதிப்பை சந்தித்தது கம்யுனிஸ சித்தாந்தம்தான். நம்மாழ்வாரின் வாழ்வே கம்யுனிஸ பிழைகளை எதிர்த்து போராடுவதாகத்தான் இருந்தது.

• அடிப்படையில் காரல் மார்க்ஸ் இந்திய கிராமங்கள் சார்ந்த பொருளாதார சமூகம் உடைக்கப்பட வேண்டும் என்று காலனிய ஆட்சி காலத்திலேயே எழுதினார். எந்த நாட்டில் பிறந்தாலும் கம்யுனிஸ்ட்களுக்கு ரஷ்யா தான் தாய் நாடு. அதுதவிர பிற நாடுகள் அனைத்தும் நரகமே. அனைத்தும் அழிந்து ரஷ்யாவின் பின்னால் நிற்க வேண்டும் என்பதே அவர்களின் சமூக கலாசார பொருளாதார கொள்கைகளின் அடிநாதமாக இருக்கும். ஆனால் நம்மாழ்வார் அவர்கள் வாழும் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார். கிராமிய வாழ்வியலை சிலாகிக்க செய்தார். கிராமங்களை மையப்படுத்திய பொருளாதாரம் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தினார். இது கம்யுனிஸ்ட்களுக்கு மிளகாயை கில்லி வைத்தது போல இருந்தது. (ஆதாரம்: British Rule in India-Karl Marx)

• கம்யுனிஸ அடிப்படைவாதிகள் இயற்கை விவசாயமே மக்களுக்கு பயன் தராது என்றும், தேவையற்றது என்றும் கருத்தெழுதி வந்தனர். சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதும் தேவையற்றும் என்று கூறினர். இதை கட்டுரைகளாக எழுதி வந்தனர். ஆனால் அவர்கள் வாதங்களை பொய் என்று நிரூபித்து உடைத்து வாழ்ந்து காட்டினார் நம்மாழ்வார் ஐயா.

• பாரம்பரியம் என்ற சொல்லையே கம்யுனிஸ்ட்கள் வெறுத்தனர். முன்னோர்கள் என்றால் எதுவும் தெரியாத, முட்டாள்தனமான அரக்கர் கூட்டம் என்ற பிம்பம் ஏற்படுவதையே விரும்பினர். ஆனால் நம்மாழ்வார் ஐயா காலையில் துவங்கும் யோகப்பயிற்சி, உணவு முதல் வீடு, மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்திலும் பாரம்பரிய வேர்கள் நமக்கு எவ்வளவு பெரிய செல்வத்தை சேர்த்து தந்துள்ளது என்பதை எடுத்துசொல்லி முன்னோர்கள் மீதும் பாரத பாரம்பரியத்தின் மீதும் பெரும் பற்று எற்படும்படி செய்தார். (ஆதாரம்: பூவுலகின் உணவரசியல் - கீற்று கட்டுரை)

• கடவுள் மறுப்பு கொள்கையுடைய திராவிடத்தை ஈன்ற தாய் கம்யுனிசம். ஆனால் நம்மாழ்வார் ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் ஓம் என்று கூறுவதும், இயற்கை வழிபடுவதையும், காவி வேஷ்டி கட்டுவதையும், தினமும் காலை யோகா, பிராணாயாமம், தியானம் செய்வதையும் கம்யுனிஸ்ட்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்க இடமில்லை. 

• பசுக்கள் தான் விவசாயத்தின் - கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதால், தனது கூட்டங்களில் ஓரிரு வார்த்தைகளாவது பசுக்கள் கேரளா செல்லும் அவலத்தையும், பசுக்களை காக்க வேண்டிய அவசியத்தையும், நாட்டு பசுக்களின் பஞ்சகவ்யத்தின் அருமைபெருமைகளை கூறுவார். நாட்டு பசுக்கள் எண்ணிக்கையில் வீழ்ந்து தற்போது தன்னார்வலர்கள் முயற்சியால் மீண்டு வரும் வேளையில், நாட்டுமாடுகளை கொன்று திண்ணுவதும் பாரம்பரியம் தான் என்றும் அதை பாரம்பரிய உணவு விழாவில் ஏன் வைக்கவில்லை என்ற அற்ப வாதங்கள் செய்தவர்கள் இந்த கம்யுனிஸ்ட்கள். அதோடு கம்யுனிஸ்ட்கள் மாட்டுக்கறி தின்பதை நியாயப்படுத்தி கவிதைகள் கட்டுரைகள் எழுதி பரப்பினர். தனது சொந்த வாழ்விலும் நாட்டுபசு மருந்துகளின் மகத்துவத்தை உணர்ந்தவராதலால், அவரை சோர்வடையச்செய்ய கம்யுனிஸ்ட்கள் வீசிய ஆயுதங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தார்.