Wednesday, 16 April 2014

கம்யூனிஸ லாபி-உண்மை முகம்

என்னதான் முரண்பாடுகள் இருந்தால் ஜெயமோகனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை பிடிக்கத்தான் செய்கிறது. ஜோடிகுரூஸ்க்கு ஆதரவாக வெளியிட்ட பதிவில் (http://www.jeyamohan.in/?p=49053, ஆதரவோடு பல உண்மைகளையும் சொல்லியுள்ளார். ஏற்கனவே ஆய்வுலகின் அந்நிய கரங்கள் (http://www.jeyamohan.in/?p=28449என்று அவர் எழுதிய கட்டுரை இதை தொட்டு சென்றதுதான்.

கம்யுனிஸ்ட்கள் என்றால் உண்டி குலுக்கி, பந்த் செய்து வேலையை கெடுக்கும், மக்கள் ஆதரவற்ற சிறு கும்பலாகத்தான் தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் சுதந்திரம் முதற்கொண்டு அவர்களின் சிந்தனை-சித்தாந்தமே நம்மை ஆண்டு வருகிறது. நம் சட்டம்-சமூகம் அவர்களின் சிந்தனையை நோக்கி திருப்ப அவர்கள் வைத்திருக்கும் ஆயுதம்தான் இந்த அறிவுலக லாபி. இந்திய எழுத்தாளர்களுக்கு எழுதி பெரும்பணம் ஈட்டலாம் என்ற நம்பிக்கை இருந்ததில்லை/இருப்பதில்லை. இது பொருளீட்டுவதற்கு சரியான துறை அல்ல என்பதை நன்றாகவே பெரும்பான்மை எழுத்தாளர்கள் புரிந்து வைத்துள்ளனர். எழுத்தாளர்களின் நோக்கம் அவர்களுக்கான ஒரு களம்-மேடை-அங்கீகாரம் அவ்வளவுதான். அதாவது, அவர்களின் எழுத்து, சிந்தனை வெளிவர பத்திரிகை, பதிப்பகம், டிவி ஆகிய களம்; அவர்களை மக்கள்முன் அறிவாளி என்று அறிமுகம் செய்து முன்னிறுத்தும் கருத்தரங்கம், விழாக்கள், டிவி விவாதங்கள், பேட்டிகள் உட்பட்ட மேடைகள்; அவர்களின் சிந்தனைகளை அங்கீகரிக்கும் விருதுகள், பட்டங்கள், சர்வதேசிய அறிமுகங்கள், மொழிபெயர்ப்புக்கள் ஆகிய அங்கீகாரம். தேசிய அளவில் கம்யுனிஸ லாபி இந்த மூன்றையும் கைப்பற்றி வைத்துள்ளது. எனவே ஒரு எழுத்தாளன் சிந்தனையாளன் தனது துறையில் வெற்றி பெற வேண்டுமானால் கம்யுனிஸ சிந்தனையை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற திணிப்பு உள்ளது. இல்லையேல் அவன் மரத்தடி ஜோசியன், தேங்காய்மூடி வக்கீல் போன்ற தாழ்வான பார்வையை பெறவேண்டும். இந்த லாபியே காலப்போக்கில் பத்திரிகை, சினிமா துறைகளையும் ஆக்கிரமித்து தற்போது கிராமிய கலைஞர்கள் வரை விஸ்தரித்து சென்று கொண்டிருக்கிறது. எதார்த்தத்தை பிரதிபலிக்காமல் சமூகத்தின் வாழ்வோட்டதிற்கும், நம்பிக்கைக்கும் புறம்பான செய்திகளையும் மனோநிலையையும் தருகிறது. இதனால் தான் பல அறிஞர்கள் டிவி, சினிமா, பத்திரிகை போன்றவற்றை பார்க்கவோ, நம்பவோ வேண்டாம் என சொல்கிறார்கள்.

ஒரு தேசத்தை எப்படி மூளைசலவை செய்வது என்று ரஷ்ய முன்னாள் நுண்ணறிவு  ஏஜென்ட் வெளிப்படுத்துகிறார்.. இதுதான் இந்தியாவில் நடக்கிறது..


குருமூர்த்தி அவர்கள் கம்யுனிஸ்ட்கள் பற்றியும் இந்திய சமூகம் பற்றியும் பேசிய பகுதிகள்..


மெக்காலே கல்வி முறையை மட்டுமே நாம் விமர்சிப்பது தவறானது. பள்ளியில் கற்பதை விட வெளியில் நாம் கற்பதே அதிகம். வெளியில் நம் அறிவுதேடலில் கிடைக்கும் அனைத்துமே கம்யுனிஸ கறைபடிந்துள்ள போது மெக்காலே மட்டுமே குற்றவாளி என்று எப்படி சொல்வது? கம்யுனிஸத்தின் தனியுடமை சொத்தாக மாறிப்போன இந்திய அறிவுலகம் மீட்கப்படாவிட்டால் அடுத்த தலைமுறை தானாக சீன-ரஷ்ய ஆணைகளுக்கு அடிபணியும் சமூகமாக மாறும்.

கம்யூனிஸ்ட்கள் காலை சுற்றும் நச்சுப்பாம்புகள் என்ற தலைப்பில் வேத விஞ்ஞான ஆய்வு மையம் வெளியிட்ட சிறு நூல்.

கம்யூனிசம் குறித்த மற்றுமொரு நல்ல பதிவு.

இவ்வளவு செய்பவர்கள் ஏன் ஆட்சி பிடிக்கவில்லை/இயலவில்லை என்றால், காரணம், இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பாரத மக்களின் தர்ம நெறிதான். அதோடு கம்யுனிஸ்ட்களுக்கு ஆட்சியை விட, கம்யுனிஸ்ட்களின் தாய்நாடாகிய ரஷ்ய-சீன அரசுகளின் கையசைவிற்கு இந்தியா தலையசைக்கும் சூழலை உருவாக்கி வைப்பதே முதன்மையான நோக்கமாகும். இந்திய சமூகத்தையே தங்கள் பாரம்பரியத்தை வெறுக்கும், பிரிவினைவாதத்தை தூண்டும், தன்னை தானே தாழ்வானவர்களாக கருதச்செய்யும், பாரம்பரியத்தை அழிக்கும் சமூகமாக மாற்ற விளைவதே இவர்கள் முன்னிறுத்தும் “சமூக மாற்றம். அந்த சமூக மாற்றம் நடந்துவிட்டால் சுலபமாக சீனாவில் நாடாகும் அடக்குமுறை ஆட்சியை அமுல்படுத்தி விடலாம். இவற்றை ஏற்பவனே எழுத்தாளன், அவன் சிந்தனைகளே சிறந்தது, அவனே அறிவாளி, அதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஏமாளியே தியாகி, அதற்கான கலவரங்களில் ஈடுபடுபவனே பெருவீரன். சே குவேரா, ஸ்டாலின், மார்க்ஸ் போன்றோர் படங்கள், புத்தகங்கள் மற்றும் இறந்தால் சிவப்பு கொடி போன்றவை தாராளமாக தரப்படும். எதிர்ப்பு திறம்படவும் பலமாகவும் இருந்தால் அவர்களை ‘அப்புறப்படுத்த தனி மாபியாக்களும் உண்டு. சந்தர்ப்பங்களை பொருத்து இஸ்லாமியர், கிறிஸ்தவ மிஷனரிகள், காங்கிரஸ் என இவர்களின் கூட்டணிகள் விரியும். திராவிடமே இவர்கள் சிந்தனையில் கலப்படம் ஏற்ப்பட்ட கருத்துதான்.சொந்தமாக சிந்திக்கும் அளவு ஈவெராவுக்கு அவ்வளவு அறிவு கிடையாது. இந்தியாவில் கம்யுனிஸ்ட்களாலும் பிறகு ரஷ்யாவிலும் கொடுக்கப்பட்ட பயிற்சியின் விளைவுதான் திராவிட கொள்கைகள்-அதாவது திராவிட டப்பா, உள்ளே கம்யுனிஸ குப்பை.


ரஷ்யாவில் ராமசாமி நாய்க்கர் 


கம்யூனிச கட்சி நிறுவனர் M.N.ராய் உடன் ராமசாமி நாய்க்கர்
இந்த கம்யூனிச சிஷ்யன் ராமசாமி நாய்க்கர் நமக்கு எப்படி கதாநாயகனாகவும், தந்தையாகவும் (!!), பெரியாராகவும் ஆக்கப்பட்டார். அவரின் உண்மை முகம் என்ன..??

பெரியாரின் மறுபக்கம்:


அப்படித்தான் கம்யுனிஸ சித்தாந்தம் நன்மை செய்யுமா என்றால், அவர்கள் ஆட்சி செய்யும் தேசங்களை கண்டாலே தெரியும். இவையனைத்தையும் பலரும் பல காலங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த கூட்டுக்குள் சிக்கி தப்பிய பலரும் கம்யுனிஸ்ட்களை துகிலுரித்து காட்டியுள்ளார்கள்.

உலகளவில் கம்யூனிசம் ஏற்ப்படுத்திய அழிவு பற்றிய தொகுப்பு நூல்.. மிகவும் புகழ் பெற்றது..

கம்யூனிசம் என்பது ஒரு இரவில் எழுதப்பட்ட அரைவேக்காட்டு தத்துவம் என்பதும்.. அதை எழுத தூண்டியதே முதலாளிகள் என்பதும்.. அதன் காரணம், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சூது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்..??


1 comment: